Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 13 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய குரான் பிறீயில் ஆதிக்கம் செலுத்திய மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸைத் தாண்டி வென்ற நிலையில், நடப்பு ஃபோர்மியுலா வண் பருவகாலத்தின் இப்பந்தயத்துடனான முதல் ஐந்து பந்தயங்களிலும் முதலிரண்டு இடங்களையும் மெர்சிடீஸ் அணியே பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்தே நடப்புச் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் ஆரம்பித்தபோதும், முதலாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த வல்டேரி போத்தாஸை முதல் திருப்பத்திலேயே முந்தியே வெற்றிபெற்றிருந்தார்.
இந்நிலையில், இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஃபெராரி அணியின் ஜேர்மனி ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் ஆரம்பித்தபோதும், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனிடம் மூன்றாமிடத்தை பறிகொடுத்திருந்தார்.
அந்தவகையில், குறித்த பந்தயத்துக்கு பிற்பாடான இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்தில் லூயிஸ் ஹமில்டன் காணப்படுவதுடன், அவரை விட ஏழு புள்ளிகள் குறைவாக 105 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸூம், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர். 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செபஸ்டியன் வெட்டல் காணப்படுவதுடன், 57 புள்ளிகளுடன் அவரின் சக ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள் லெக்கலெர்க் 57 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago