Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், மல்லோர்காவின் மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஈடன் மிலிட்டாவோ பெற்றதோடு, மல்லோர்கா சார்பாக மனு மொர்லேன்ஸ், வேதத் முரிக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜல்லியானோ சிமியோனே பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. 69 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் 58 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் வில்லாறியலும் 57 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் அத்லெட்டிகோவும் காணப்படுகின்றன. மற்றைய அணிகளை விட வில்லாறியல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago