2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

Mayu   / 2024 பெப்ரவரி 11 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. 7-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையில் இருந்தது.

இதற்கமைய, 34-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்தது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கில் கேப்டன் மிரல்ஸ் மார்க் கோல் அடித்தார்.

50-வது நிமிடத்தில் இந்திய அணியின் லலித் குமார் உபாத்யாயா பீல்டு கோல் அடித்து அசத்தினார்.முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்றைய தினம் (11) நெதர்லாந்துடன் மோதுகிறது. இந்த விளையாட்டு இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X