Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல் ஜஸீராவால் இவ்வாண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புலனாய்வு விவரணப் படத்தைத் தொடர்ந்து, தற்போதை, முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கெதிரான புதிய ஸ்பொட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் அல்ஜஸீராவால் வெளியிடப்படவுள்ளதெனத் தெரிகிறது.
குறித்த குற்றச்சாட்டுகள், 2011ஆம் ஆண்டு முதலான வரலாற்று ரீதியிலான போட்டிகளுடன் தொடர்புபட்டவை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா முடித்ததுடன், பின்னர் உலகக் கிண்ணத்திலும் பங்களாதேஷ், இலங்கை, தென்னாபிரிக்கா சுற்றுப் பயணங்களிலும் பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்தையும் இந்தியாவையும் எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நன்நடத்தைப் பிரிவொன்று விசாரணை மேற்கொண்டதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறியுள்ளார்.
அந்தவகையில், அல் ஜஸீராவால் வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களின்படி தற்போதைய அல்லது முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புபட்ட மோசடியான எந்தப் பிரச்சினைகளையும் தமது பிரிவு கண்டுபிடிக்கவில்லை என ஜேம்ஸ் சதர்லேண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொலைக்காட்சி செய்தி வலையமைப்பான அல் ஜஸீராவால் வெளியிடப்பட்ட ஆரம்ப விவரணப்படத்தில் அனீல் முனாவார் என பெயரிடப்பட்டவர் குறித்த தகவல்களை சர்வதேச கிரிக்கெட் சபை பொதுமக்களிடம் கோரிய அதே நாளிலேயே மேற்குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சட்டரீதியற்ற சூதாட்ட வலையமைப்புகளுக்கான ஸ்பொட் பிக்ஸிங்கை நடத்துபவர் அனீல் முனாவர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் தகவல்படி, அல் ஜஸீராவால் ஒளிபரப்பப்படவுள்ள நிகழ்ச்சி, அனீல் முனாவரும் சட்டரீதியற்ற சூதாட்டத் தரகர்களும் ஸ்பொட் பிக்ஸிங்குக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடியது தொடர்பான பதிவு ஒளிபரப்பாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
6 hours ago