2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹேரத்துக்கு உபாதை: இந்தியா செல்கிறார் வன்டர்சே

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், புதுடெல்லியில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாமில், இளம் புறச் சுழற்பந்துவீச்சாளரான ஜெப்ரி வன்டர்சே சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், நாக்பூரில் நேற்று முன்தினம் முடிவுற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து முதுகுப் பகுதியில் வலி இருப்பதாகத் தெரிவித்தமையைத் தொடர்ந்தே, இலங்கைக் குழாமில் ஜெப்ரி வன்டர்சே சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த முதலாவது போட்டி இடம்பெற்ற கொல்கத்தா ஆடுகளத்தில் எட்டு ஓவர்களே ரங்கன ஹேரத் வீசியிருந்தபோதும் நாக்பூர் டெஸ்டில் 39 ஓவர்கள் வீசியிருந்தார். நாக்பூரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வீழ்த்தியிருந்தபோதும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்காக 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் ஏழு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜெப்ரி வன்டர்சே டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா தவிர இலங்கைக் குழாமில் லக்‌ஷன் சந்தகான் இடம்பெற்றிருந்தபோதும் ஜெப்ரி வன்டர்சே அழைக்கப்பட்டுள்ள நிலையில், ரங்கன ஹேரத்தால் விளையாட முடியாமல் போனால் அணியில் ஜெப்ரி வன்டர்சே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .