2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மட்டு.விலிருந்து 942 முறைப்பாடுகள்

Super User   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து இதுவரை 942 பேரின் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதில் இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில்; மட்டக்களப்பில் காணாமல் போனோரினது 800 பேரின் விபரங்களை இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சிக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரனினாலும் அதே போன்று காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த முஸ்லிம் கிராமங்களில் இருந்து காணாமல் போன 112 பேரின் தகவல்கள் பிரதியமைச்ச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோரினாலும் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து காணாமல் போன 30 பேரின் விபரங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகியோரினால்  இந்த ஆணோக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த விபரங்கள் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பரணகமவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து காணாமல் போனோரினது விபரங்கள் தொடர்ந்து திரட்டப்பட்டு வருவதாக இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சிக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

காணாமல் போணோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு காணாமல் போணோர் தொடர்பான விபரங்களை ஒப்படைக்கும் முடிவு திகதி எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .