2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 10 பேர் கைது

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த 10 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையக ஆய்வு  பிரிவுப் பொறுப்பாளர் நிஹால் தஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் பிரிவில் மின்சார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் வெல்லாவலி பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே சட்டவிரோதமாக மின் பாவனையில் ஈடுபட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் வெள்ளாவலி பொலிஸார் ஊடாக ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என நிஹால் தஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .