2025 மே 01, வியாழக்கிழமை

தையல் பயிற்சியை நிறைவு செய்த 15 பேருக்கு சான்றிதழ்கள்

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, ஹரித்தாஸ் எகெட் நிறுவத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற 'வாழ்வியல் கலை' தையல் பயிற்சியை நிறைவு செய்த 15 பெண்களுக்கான சான்றிதழ்கள், புதன்கிழமை (8) தேற்றாத்தீவு புனித யூதா இல்ல கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு, தேற்றாத்தீவு கருணை இல்ல அருட்சகோதரிகளால் 7 ஆம் கட்ட பயிற்சி நடத்தப்பட்ட இப் பயிற்சி நெறியில் கல்லாறு, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய கிராமங்களில் யுத்தம், சுனாமி, வறுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 15 யுவதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், கல்லாறு புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜீ.அம்புறோஸ், தேற்றாத்தீவு புனித யூதா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பி.ஜீவராஜ், நிறுவக நிருவாக முகாமையாளர் கிங்ஸ்லி பாத்லட், நிறுவக டயக்கோணியா திட்ட உத்தியோகஸ்தர் பி.செல்லத்துரை, தேற்றாத்தீவு கிராம சேவகர் சத்தியசீலன், இந்து ஆலய குருக்கள் சதாசிவம், கருணை இல்லத் தலைவி இமாக்குலேற்றா உட்பட ஏனைய அருட்சகோதரிகள், பயிற்சி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள், அடுத்த கட்ட பயிற்சியை பெறவுள்ள பிள்ளைகளும் கலந்துகொன்டனர்.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் அடிகளாரால் தையல் கண்காட்சி கூடமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .