2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சமுதாயம் சார் சீர்த்திருத்த உத்தியோகஸ்தர்கள் 24இல் கடமை பொறுப்பேற்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் வடக்கு கிழக்குக்கென நியமிக்கப்பட்ட 9 சமுதாயம் சார் சீர்த்திருத்த உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் இயங்கும் வகையில் அமைச்சினால் சமுதாயம் சார் சீர்த்திருத்த உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சிகள் கடந்த 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்று, இரண்டாம் கட்டப் பயிற்சிகள் கடந்த 17ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன.

இவர்களுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றதையடுத்து எதிர்வரும் 24ஆம்திகதி வடக்கு கிழக்கிலுள்ள நீதவான் நீதிமன்றங்களிலுள்ள அலுவலகங்களில் கடமைகளைப் பொறுப்பேற்பர் என மட்டக்களப்பு மாவட்ட சமுதாயம் சார் சீர்த்திருத்த உத்தியோக்தர் எஸ்.தயானந்தன் தெரிவித்தார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் இந்த உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயம் சார் சீர்த்திருத்தத் திணைக்களமானது, நீதிமன்றங்களில் சிறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுபவர்களைச் சீர்த்திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நீதவான் நீதிமன்றங்களில் இந்த சமுதாயம் சார் சீர்த்திருத்த அலுவலகங்கள் இயங்குகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .