2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் 29 பேர் உயிரிழப்பு

Kogilavani   / 2012 ஜூன் 07 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
கடந்த ஐந்து மதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்தக்களால் 29பேர் உயிரிழந்துள்ளாதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த 2009, 2010, 2011 ஆகிய மூன்று வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களினால் 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 2009 ஆம் ஆண்டு 48 பேரும்,  2010 ஆம் ஆண்டு 54 பேரும், 2011ஆம் ஆண்டு 56 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 2010ஆம் ஆண்டு வீதி விபத்துக்களினால் 10பேர் உயிரிழந்துள்ளதுடன் 93 பேர் காயமடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு 11பேர் மரணடநை;துள்ளதுடன் 169பேர் காயமடைந்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .