2025 மே 01, வியாழக்கிழமை

மேய்ச்சல் தரை விவகாரம்: 21 ஆம் திகதி கூட்டம்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சல் தரைக்காணிகள் அத்துமீறி பிடிக்கப்பட்டது தொடர்பில் ஆராயும் உயர் மட்டகூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கடந்த 28-11-2013 அன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற காணி,காணி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் அமைச்சரிடம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைச்சு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பாலுற்பத்தி விவசாயிகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த புல்நிலங்களையுடைய காணிகள் பிரதேச வாசிகளினால் பலவந்தமாக அத்துமீறி கைப்பற்றப்பட்டுள்ளதால் அக்காணிகளை மீண்டும் பாலுற்பத்தி விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்யெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவினால் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 21-01-2014அன்று காலை 9.30மணிக்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள்,வன பரிபால திணைக்கள நாயகம்,கிழக்கு மாகாண காணி ஆணையாளர்,கிராண்,செங்கலடி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் தொடர்புகொண்டபோது,தனக்கும் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வைப்பெற்றுத்தருமாறு காணியமைச்சருக்கு கடிதம் சமர்ப்பித்திருந்தேன்.

அதன் பிரகாரம் இந்தப்பிரச்சினைக்கான தீர்வைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .