2025 மே 02, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்து செல்ல முயற்சி: 4 தமிழர்கள் பூஸாவில்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நியூசிலாந்துக்கு சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்ல முயன்ற மட்டக்களப்பு மாவட்டத்ததைச்சேர்ந்த 4 இளைஞர்கள் காலி பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கல்குடாவைச்சேர்ந்த நல்லநேசன் புவநேசன், தவராசா ஜெயசீலன், பாசிக்குடாவைச் சேர்ந்த கனகசிங்கம் சுரேஸ்குமார், நாவலடியைச் சேர்ந்த ராஜசிங்கம் சுரேஸ்குமார் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11ஆம் திகதி மட்டக்களப்பு நாவலடியிலிருந்து நியூசிலாந்துக்கு செல்வதற்காக 45பர் படகுமூலம் சென்றுள்ளனர்.

இவர்களுள் 41  பேர் சிங்களவர்கள் ஏனைய நால்வரும் மட்டக்களப்பு மாவட்டத்ததை சேர்ந்த தமிழ் இளைஞர்களாவர்.

நியூசிலாந்து செல்லும் வழியில் படகுக்கான எரிபொருள் தீர்ந்த காரணத்தினால் இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து இவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை(6) காலி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 45 பேரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  பூஸா தடுப்பு முகாம் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X