2026 மே 06, புதன்கிழமை

குளவிக் கொட்டில் 4 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் 4 பேர்  குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.

மண்டூர் கூமாவடி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டிலிருந்து வெளியில் வந்த குளவிகளே நேற்று புதன்கிழமை முற்பகல் இவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டில் படுகாயடைந்த 4  பேரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வெல்லாவெளி பொலிஸார், அப்பகுதியூடான  போக்குவரத்தை தற்காலிகமாக தடைசெய்து குளவிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .