2025 மே 02, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி திட்டங்களுக்காக 886.87 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டின் அபிவிருத்தி வேலைகளுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 886.87 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இதில் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தற்காக 1.88 மில்லியன் ரூபாவும், கமநெகும திட்டத்திற்காக 348 மில்லியன் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 30 மில்லியன் ரூபாவும், கிழக்கின் உதயம் திட்டத்திற்காக 250 மில்லியன் ரூபாவும், கிராமிய பாடசாலைகளுக்கான மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 18 மில்லியன் ரூபாவும், மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 75 மில்லியன் ரூபாவும், கைவிடப்பட்ட அல்லது பூரணப்படுத்தப்படாத அரச சொத்துக்களை மறு சீரமைப்பதற்காக 13.97மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டங்களுக்காக வாழ்வின் எழுச்சித் திணைக்களத்திற்கு 60 மில்லியன் ரூபாய் மற்றும் கிராமியப் பாதைகளை புனரமைப்பதற்காக 90 மில்லியன் ரூபாவை உள்@ராட்சித் திணைக்களத்திற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நேரடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X