2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

10 வயது சிறுமியை 68 வயது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம்

Super User   / 2013 ஜனவரி 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனையில் 10 வயது சிறுமியை 68 வயது முதியவர் நேற்று புதன்கிழமை இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான முகமது ஆதம்பாவா வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .