2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துர்க்கிஸ்தானில் இருந்து 10 பேர் நாடு திரும்பினர்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


துர்க்கிஸ்தானுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற இளைஞர்களில் 10 பேர் இன்று வியாழக்கிழமை (14) மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு திரும்பி வந்தவர்களில் ஒருவர் யாழ். மாவட்டத்தினையும் ஏனைய 9 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் சேர்ந்தவர்களாவர். தொழில் வாய்ப்புக்களுக்காகச் இவர்கள் கடந்த 2012, 2013 ஆண்டுகளில் அங்கு சென்றதாகத் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் தாம் அங்கு சென்றதிலிருந்து தம்மை அந்நாட்டு அதிகாரிகள் சீராக வழிநடாத்தினர். எனினும், கடந்த ஒன்றரை மாதகாலமாக அந்நாட்டு  இராணுவத்தினரால் அடித்து துன்புறுத்தலுக்குள்ளானதாகவும், தம்மிடமிருந்த அனைத்து உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தாம் நாடு திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் பத்து சத வீத வட்டிக்கு கடன் பெற்று வெளிநாடு சென்றதாகவும் ஆனால் தற்போது ஏமாற்றப்பட்டு  கனவுகள் நிறைவேறாத நிலையில் வீடு திரும்பியுள்ளதாக என்று மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தின் செல்வபுரதை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தான் வீடு கட்டுவதற்கு அதிபாரமிட்ட நிலையில் அதனைக் கட்டி முடிக்க முன்பே  துன்புறுத்தல்கள் காரணமாக இன்று வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

துர்க்கிஸ்தானில் 365க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள் அங்கு மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை இலங்கை அரசு பாதுகாப்பாக வரவழைக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

துர்கிஸ்தானில் இலங்கையரும், நேபாளத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் தொழிலுக்காக இருப்பதாகவும், தொழிலாளர்கள் தடுத்துவைக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து துர்க்கிஸ்தான் சென்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக தாம் வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலயகத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு தெரிவிக்கின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X