2025 மே 02, வெள்ளிக்கிழமை

தீவிபத்தில் 10 இலட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர், பிரதான வீதி, வம்மியடி பகதியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் ஏறாவூர் பொலிஸில் சனிக்கிழமை(5) முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த் ஏ.எல்.அப்துல் றஸ்ஸாக் என்பவரின் மரத்தளவாட  விற்பனை நிலையமும் ராஜசிங்கம் சதீஸ்குமார் என்பவரின் மர அரிவு நிலையமுமே இவ்வாறு தீவிபத்தினால் சேதமடைந்துள்ளன.

மர அரிவு நிலையம் அமைந்துள்ள கடையின் பின் பகுதியிலிருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது.

வழமை போன்று வெள்ளிக்கிழமை கடை மூடப்பட்டிருந்ததால் இந்த மரத்தளவாட விற்பனை நிலையத்தில் எவரும் இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும் தனது கடைக்கு தீவைக்க முயற்;சி எடுக்கப்பட்டதாகவும் அது குறித்து ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மரத்தளவாட விற்பனை நிலைய உரிமையாளரான ஏ.எல்.அப்துல் றஸ்ஸாக் தெரிவித்தார்.

இத்தீவிபத்துக் காரணமாக ஆறு இலட்சம் ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளதாக ஏ.எல்.அப்துல் றஸ்ஸாக் முறையிட்டுள்ள அதேவேளை சுமார் நான்கு இலட்ச ரூபாய் பெறுமதியான தனது மர அரிவு இயந்திரங்கள் தீயினால் எரிந்துள்ளதாக் ராஜசிங்கம் சதீஸ்குமார் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X