2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் பாதணி தொழிற்சாலை; 100 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


அமெரிக்க அரசாங்கத்தின் யூ.எஸ்.எயிட் அமைப்பின் 3 கோடி 50 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாதணி தயாரிப்பு தொழிற்சாலையை அமெரிக்க யூ.எஸ்.எயிட் நிறுவன பணிப்பார் செர்ரி எப்.கார்ளினால் இன்று காலை மட்டக்களப்பு கிரான்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் தாளங்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையினால் இப்பிரதேசங்களில் யுத்தம் மற்றும் சுனாமியனால் பாதிக்கப்பட்ட 100 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகள் மற்றும் புதியரக இயந்திரங்களின் உதவியுடன் இங்கு பாதணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் இதன் மூலம் பெரும் நன்மை அடைந்துள்ளனர். யூ.எஸ்.எயிட் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X