2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்ட 118 பேர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (ஸரீபா, எம்.சுக்ரி)
மட்டக்களபபு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்பாவனையில் ஈடுபட்டு வந்த 118 பேர் கடந்த வாரம் முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வரும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையில்; இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளை  கொண்ட குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சட்ட விரோதமாக மின் பாவனையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் 42 பேரும் களுவான்சிக்குடி பகுதியில் 24 பேரும் வவுனதீவில் 20 பேரும் ஆயித்தியமலை பகுதியில் 12 பேரும் வாழைச்சேனை பகுதியில் 8 பேரும் கல்குடா பகுதியில் 6 பேரும் கரடியனாறு பகுதியில் 4 பேரும் மட்டக்களப்பு பகுதியில் 2  பேருமாக மொத்தம் 118 பேர் கடந்தவாரம் முதல் நேற்ற வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை ஆகிய நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு ஒருவருக்கு தலா பத்தாயிரம் (10000) ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையக ஆய்வு பிரிவு பொறுப்பாளர் நிஹால் தஸாநாயக்க தெரிவித்தார்.

இந் நடவடிக்கை சகல பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் மின்சாரத்தினைப் பெரும் மக்கள் தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருவதாகவும் நிஹால் தஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .