2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் 14,000 பனங்கன்று நடும் திட்டம் அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 14ஆயிரம் பனை மரக்கன்றுகளை நடும் திட்டம் மட்டக்களப்பு பனை அபிவிருத்தி சபையுடன் இணைந்து மாவட்ட சிரேஸ்ட பிரஜைகளின் அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட சிரேஸ்ட பிரஜைகளின் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் மட்டக்களப்பு, கல்லடி, வேலூர் கடற்படை முகாமை அடுத்துள்ள பிரதேசத்தில் இதன் முதல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சுப வேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட அதிகாரி எஸ்.விஜயன், இராணுவத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிவில் இணைப்பதிகாரி நாலந்த கொட்டபுல, முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் எதிர்காலச் சந்ததியினரையுமு; அவர்களது எதிர்கால வாழ்வினையும், பொருளாதாரத்தினையும் மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சிரேஸ்ட பிரஜைகளின் அமைப்புகளின் சம்மேளனத்தின் கனவுத்திட்டமாக இந்த 14ஆயிரம் பனங்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுவதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

இதனால் 2050ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் ஒரு பனை மரத்தினைக் கொண்டு ஒரு குடும்பம் வாழக்கூடிய சிறப்பினைக் கொண்டதாக மாறும் அதன் அடிப்படையில் நடப்படவுள்ள 14ஆயிரம் பனைகளினால் 14ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பேணப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .