2025 மே 05, திங்கட்கிழமை

பெண் தலைமைத்துவப் பயிற்சிக்காக 15 பேர் இந்தியா பயணம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்தியாவில் நடைபெறவுள்ள 'அபிவிருத்திச் சமூகத்திற்காக கிராமியக் கல்வி '  எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக்காக இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட  15 பெண்கள்  நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியா பயணமாகியுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் டும்கூர் நகரில் இந்த தலைமைத்துவப் பயிற்சிநெறி நடைபெறவுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலுமிருந்து பல்வேறு துறைகளில் பெண்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் இதற்கெனத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என வவுனியா மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர் சங்கச் செயலாளர் எஸ்.ஜிப்ரியா பேகம் தெரிவித்தார்.

மேற்படி தலைமைத்துவப் பயிற்சியை முடித்துக்கொள்ளும் பெண்கள் இம்மாதம் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X