2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 16 வகையான மூலப்பொருட்களை பயன்படுத்துவதில்லை: சிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் 16 வகையான மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை பயன்படுத்தப்படுவதில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 'திவிநெகும' உற்பத்திச் சந்தையை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்தில் 16 வகையான மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை பயன்படுத்தப்படுவத்தில்லை. அந்த மூலப்பொருட்களை நாம் பயன்படுத்தினால் அநேக உற்பத்திகளை நாம் மேற்கொள்ள முடியும். இவை பயன்படுத்தாமைக்கான பிரதான காரணம் சரியான வழிகாட்டல்கள் இல்லை என்பதுதான்.

எதிர்காலத்தில் இந்த மூலப்பொருட்கள் தெடர்பில் சரியான வழிகாட்டல்களை காட்ட வேண்டும். அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதற்கான சரியான வழியாக இந்த திவிநெகும திட்டத்தினை நாம் பயன்படுத்த முடியும்' என்றார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.அஹமட், சமுர்த்தி முகாமையாளர்களான இ.குணரட்னம், எம்.பரமலிங்கம், ஏ.எல்.சுல்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .