2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு பல்கலையின் 17ஆவது பட்டமளிப்பு விழா சனி, ஞாயிறு தினங்களில்

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், க.ருத்திரன், எம்.எஸ்.நூர்தீன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனி (20) மற்றும் ஞாயிறு (21) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்திலேயே பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய, கலை மற்றும் கலாசார, வியாபார முகாமைத்துவம், விஞ்ஞான, சௌக்கிய பராமரிப்பு உள்ளிட்ட ஏழு பீடங்களைச் சேர்ந்த 912 பேர் இம்முறை பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில், பிரதம அதிதியாக உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க கலந்துகொள்ளவுள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ கலாநிதி பட்டம் முன்னாள் நீதி அமைச்சர் அமரர் கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகத்துக்கு வழங்கப்படுவதாக உப வேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் முதலாவதாக கற்கைகளை முடித்து வெளியேறும் 27 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. அத்துடன் பட்ட மேல் கற்கைகளான முது கலைமாணி, வியாபார முகாமைத்துவம், கல்வி டிப்ளோமா உள்ளிட்ட கற்கைகளை முடித்துக் கொண்ட 171 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .