2026 மே 06, புதன்கிழமை

செங்சிலுவைச் சங்க மட்டு. கிளைக்கான தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும்

Kanagaraj   / 2013 மே 03 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை செங்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிர்வாகத்தினை  தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு கிளையின் பொதுக் கூட்டத்தின் போதே இத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் 10 பேரை தெரிவு செய்வதற்காக 27 பேர் போட்டியிடவுள்ளனர். இதில் தலைவர் பதவிக்காக தற்போதய தலைவர் ரி.வசந்தராசா மாத்திரமே விண்ணப்பித்துள்ளதால் அப்பதவியை தவிர ஏனைய அனைத்துப்பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செயலாளருக்காக இருவரும், உப தலைவர் பதவிக்காக 3பேரும், பொருளாளர் பதவிக்காக 3பேரும், 6 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்காக 19பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 பிரிவுக்கிளையில் இருந்தும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 100 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .