2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 18 பேர் வாழைச்சேனையில் கைது

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

சட்டவிரோதமாக மின்மானிகளை உடைத்து மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 18 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த 18 சந்தேக நபர்களும்; வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலன் விசாரணைக்குப் பொறுப்பான பிரதி புலனாய்வு அதிகாரி எல்.பி.சமரதுங்க தெரிவித்தார்.

இந்தச் சந்தேக நபர்களிடம் வாழைச்சேனை பொலிஸார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .