2026 மே 06, புதன்கிழமை

பாதுகாப்புச் செயலர் 18ஆம் திகதி மட்டு. விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுசைன்

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்தின் போது தொப்பிகலையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியை அவர் திறந்து வைப்பார்.

தொப்பிகலைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து  மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளதாக தொப்பிகலை பிரிகேட் படையினர் கூறினர்.

தமிழ் சிங்கள புத்தாண்டின்; பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • vallarasu Tuesday, 16 April 2013 07:24 AM

    இலங்கையில் உள்ள எல்லா அமைச்சர்மார்களுக்கும் செயள‌ர் இருக்கிறார்கள்... இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்தானே... ஏன் இவர் மட்டும் ஒருநாட்டின் ஜனாதிபதி போல் செயல்படுகிறார்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .