2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு பல்கலையின் புதிய கல்வியாண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் 18 இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2012 மற்றும் 2013ஆம் புதிய கல்வி ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் 18.8.2014 அன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் எம்.மகேசன் தெரிவித்தார்.

கலை, கலாசாரபீடம், விவசாயபீடம், வர்த்தக முகாமைத்துவபீடம், விஞ்ஞானபீடம் ஆகிய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மேற்படி பீடங்களைச் சார்ந்த சகல மாணவர்களும் தத்தமது விடுதிகளுக்காக 17.8.2014 அன்று மாலை  05 மணிக்கு முன்னர்; கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழகம் (பொது)                : 065௨240490

உதவிப் பதிவாளர்ஃமாணவர் நலன்புரிச்சேவைகள்       : 065௨240731

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X