2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்கு நுளம்புச் சூழலை வைத்திருந்த 20 பேர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் 20 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில்; காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், காத்தான்குடி பிரதேச செயலகம் ஆகியவற்றின்  அனுசரணையுடன் காத்தான்குடி முதலாம் குறிச்சி, முதியோர் இல்ல வீதி, புதிய காத்தான்குடி போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில்  ஞாயிற்றுக்கிழமை  (18) டெங்கு பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும்,  சில இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டன.  வெற்று டயர்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய பொருட்கள்   அகற்றப்பட்டதாகவும்  யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன்,  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியேகாத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவு தொண்டர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் டெங்கு பரிசோதனையிலும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X