2025 மே 01, வியாழக்கிழமை

அமரர் டீ.எஸ்.கே வணசிங்கவின் 25வது ஆண்டு நினைவு தினம்

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தேவ அச்சுதன், வடிவேல்-சக்திவேல்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னாள் பிரதித் தலைவருமான டீ.எஸ்.கே.வணசிங்கவின் 25வது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 31.03.2014 அனுஷ்டிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள அமரர் வணசிங்க நினைவுப் பணிச்சபை அது தொடர்பாக நினைவுமலர் ஒன்றினை வெளியிடும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

எனவே, அமரர் டீ.எஸ்.கே.வணசிங்கவின் பற்றிய தகவல்கள் மற்றும் அவரது கல்வி, சமூக, தொழிற் சங்கப் பணிகள் குறித்த விடயங்கள் உள்ளடக்கிய ஆக்கங்களை பொதுச் செயலாளர்,  அமரர் டீ.எஸ்.கே வணசிங்க, நினைவுப் பணிச் சபை, இல- 50 லேடி மனிங் டிறைவ் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமாறு கோரப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .