2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காசுக்கான வேலைத்திட்டத்துக்கு ரூ.30 மில்லியன் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் முதற்கட்டமாக 30 மில்லியன் ரூபாய் காசு வேலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதென  மாவட்ட திட்டமிடல் செயலகம் தெரிவித்தது.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் வரட்சி நிலவுகின்ற பிரதேசங்களில்  தெரிவுசெய்யப்பட்ட 10 சிறு நீர்ப்பாசனக்குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கெல்வத்துமடுக்குளம், சாளம்பையடிக்குளம், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தரணிக்குளம், கற்பொக்கணைக்குளம், வில்லுக்குளம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அன்புக்குளம், களிக்குளம்,  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீனாட்சியோடைக்குளம், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மோடைமேட்டுக்குளம் உள்ளிட்டவை புனரமைக்கப்படுகின்றன.

மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினுடைய  அறிவுறுத்தலின்படி மாவட்ட திட்டமிடல் பணியகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் இக்குளங்கள் புனரமைப்புக்கப்படுகின்றன.

மேலும் குடும்பமொன்றிலிருந்து ஒருவர் இவ்வேலையில் பங்குபற்ற முடியுமென்பதுடன், அவருக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய்  என்ற அடிப்படையில் மாதமொன்றுக்கு 6,000  ரூபாய்க்கு மேற்படாத கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வாழ்வாதார நிவாரணத்தை பெறுவதுடன், சிறு நீர்ப்பாசனக்குளங்களை புனரமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கமுடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X