2026 மே 06, புதன்கிழமை

நாவற்குடாவில் 34 கிலோ கஞ்சா கைப்பற்றல்; இருவர் கைது

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்தில் நேற்று வியாழக்கிழமை 34 கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் வைத்து இந்த கஞ்சாவை கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் எஸ்.ஐ.ஜயவர்த்தன மற்றும் எஸ்.ஐ.உபாலி, சார்ஜன்ட் ஜெயசுந்தர, சார்ஜன்ட் பத்மசேன மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களான விதானகே, மற்றும் ஜயரத்ன ஆகியோர் இந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ 600 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .