2025 மே 05, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 36,000 சிகரெட்டுக்கள் மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்ப, காத்தான்குடியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான 36000 சிகரெட்டுக்களை காத்தான்குடி பொலிஸார் இன்று கைப்பற்றியதுடன் அவற்றினை வைத்திருந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் உத்தரவின் பேரில் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.எதிரிசூரிய தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ்.திலகரட்ன, எம்.லக்மல், எஸ்.கே.பி.டி.எம்.தெண்ணக்கோன், டி.எம்.என்.மதுசங்கர் ஆகியோர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள சில்லறைக்கடை ஒன்றின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்;டுக்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • AJ Saturday, 24 August 2013 11:05 AM

    காத்தான்குடி பிரதேசத்தில் போலியான சட்டவிரோத குளுசைகள் தயாரிக்கப்பட்டு அதை விற்பனை செய்கிறார்கள் என்று என்னுடைய நண்பர் சொன்ன விடயம். இதையும் போலீஸ் கணக்கில் எடுக்குமா? எத்தனை பிள்ளைகள் அதை சாப்பிட்டு இருக்கும்? எந்த அரசுக்களுக்கும்
    இது மண்டையில் ஏறுவது இல்லை? பணத்துக்காக... சாப்பிடும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள்.

    Reply : 0       0

    AJ Saturday, 24 August 2013 11:06 AM

    சகல விடையங்களும் இங்கு நடைபெறுகின்றன.. ஹி...ஹி... கேட்டால் நாங்கள் ரொம்ப நல்லவங்க என்று சொல்லுவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X