2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Super User   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம். சுக்ரி, ஜிப்ரான்,
ஜவீந்திரா, ரி.லோஹித்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் மரங்கள் வினியோகிக்கும் நடவடிக்கை  மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மாவட்டத்தின் 345 கிராம சேவையாளர் மட்டத்திலும் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன.

இதன் ஒரு அங்கமாக காத்தான்குடி பிரதேச செயலக ரீதியான பிரதான வைபவம் புதிய காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் மரக்கண்டுகள் நடப்பட்டதுடன் தென்ன மரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பிரதான வைபவம் காங்கேயனோடையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச சபை தலைவர் கிருஷ்டினா உட்பட பலர் கலந்துகொண்டார். இதன்போது, மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டதுடன் மர நடுகையும் இடம்பெற்றது.

இதேவேளை, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 315 பயனாளிகளுக்கு பயிர் விதை பைகளும் தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணிக் கிராமத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .