2025 மே 02, வெள்ளிக்கிழமை

கல்லடிப் பிரதேசத்தில் 4 வீடுகளில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் 04 வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி மற்றும் கல்லடி வேலூர், நாவற்குடா போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளது.

வீடுகள் உடைக்கப்பட்டு  உடைமைகள், தங்கநகைகள், மடிக் கணினி உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும்  வீட்டு உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்ததாகவும் பொலிஸார் கூறினர்;.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்னவின் ஆலோசனைக்கு அமையவும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமையவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X