2025 மே 02, வெள்ளிக்கிழமை

மதுபாவனைக்காக மாதாந்தம் 400 மில்லியன் செலவிடப்படுகிறது: சார்ள்ஸ்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்  


“எனது நிர்வாகத்தில் ஒளிவு மறைவு கிடையாது. மூடிய அறைக்குள் வேலை செய்யவில்லை. வெளிப்படத்தன்மையுடன் நான் எனது நிர்வாகத்தை மேற்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பொறுப்பேற்றதன் பின்னர் மாவட்டத்தில் எந்தவொரு புதிய மதுபானசாலையை திறப்பதற்கும் நான் அனுமதி கொடுக்கவில்லை” என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தொpவித்தார்.

“மதுபாவனை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதமொன்றுக்கு 400 மில்லியன் ரூபா செலவு செய்யப்படுகின்றது. நான் இதை கூறத்தொடங்கியதையடுத்தே சகலருக்கும் இந்த விடயம் தெரிய வந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை(7) நடைபெற்ற மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மதுபானசாலைகள் திறப்பதை ஆட்சேபித்து மதுவாp ஆணையாளருக்கு ஒரு கடிதமொன்றையும் அனுப்பினேன்.
மக்களின் நலனில் எனது சுகபோகத்தை நான் அனுபவிக்கவில்லை. என் மீது தவறான இட்டுக்கட்டப்பட்ட செய்தியொன்று வெளிநாட்டிலிருந்து இயங்கும் இணையதளமொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அந்த செய்தி குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். அதற்கு நிச்சயம் இறைவன் தண்டனை வழங்குவான். இங்கு எனக்கு அழுத்தங்கள் மிக குறைவு. இந்திய வீட்டுத்திட்டம் பற்றி என்னிடம் சில முறைப்பாடுகள் வந்தன.

அவற்றை எனது அதிகாரிகளை கொண்டு பாரிசீலனை செய்து அதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஊடகவியலாளார்கள் பிழையை சுட்டிக்காட்ட வேண்டும். மக்களின் தேவைகளை சுட்டிக்காட்ட வேண்டும். அது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்க வேண்டும். மாறாக பொய்யான தவறான செய்திகளை வெளியிட ஒரு போதும் முனையக் கூடாது.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் என்பவற்றை சாpயான புள்ளி விபரங்களுடன் ஊடகவியலாளா;கள் அறிக்கையிடல் வேண்டும்.

அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்க ஆயத்தமாக இருப்பதுடன் மாவட்ட செயலகத்திலுள்ள தகவல் பிhpவும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கும்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளார்களுக்கு மாவட்ட செயலகத்தினூடாக ஒரு அடையாள அட்டையொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதுடன் ஊடகவியலாளர்களின் நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க நீங்கள் ஒரு அமைப்பாக செயற்படவேண்டும். மாதமொருமுறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளார்கள் சந்தித்து கலந்துரையாடுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X