2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சமூகத்தொடர்பு நிலையத்தின் 48ஆவது உலக தொடர்பு தின விழா

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத்தொடர்பு நிலையம் நடாத்திய, 48ஆவது உலக தொடர்பு தின விழா  மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா இந்நிகழ்வின் போது கலந்துகொண்டு கூறுகையில், தொடர்பாடல் என்றால் பிரிந்திருப்போர் இணைய வேண்டும்  வேற்றுமை களைந்து ஒன்றாக இருக்க வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளதாக ஆயர் குறிப்பிட்டார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மனித உரிமைகள் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இன்று பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம் இல்லை. தொடர்புசாதனங்களின் அபார வளர்ச்சியால் உலகம் சுருங்கி விட்டது. இதனால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. இந்நிலையில், கலாசாரம் மற்றும் ஒழுக்கம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித சிசலியா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் நாட்டுக்கூத்து நிகழ்வும் இதன் போது மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், பேராசிரியர் மௌனகுரு, கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எஸ். ஆர் ராகுலநாயகி, வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் கலாசாரப் பணிப்பாளர் எஸ். எதிர்மனசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X