2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருக்கள்மட விவகாரம்; 48பேர் பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை தோண்டுமாறு கோரி களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம், கொல்லப்பட்டவர்களின் 48பேர் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு பதிவு செய்யும் நடவடிக்கை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. ஞாயிற்றக்கிழமை (06) முதல் இன்று (08) செவ்வாய்க்கிழமை வரை இந்த முறைப்பாடு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் ஞாயிற்றுக்கிழமை 28பேரும், திங்கட்கிழமை 13பேரும், செவ்வாய்க்கிழமையான இன்று 7பேரும் முறைப்பாடுகளைச் செய்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வது சிரமம் எனவும் அதை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைய களுவாஞ்சிகுடி பொலிஸார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர்களின் முறைப்பாடுகளை பதிவு செய்துகொண்டனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி.ஐ.இந்திக லொகுகே தலைமையில் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

12.7.1990 அன்று கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற தமது உறவினர்களை குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொலை செய்து அப்பிரதேசத்தில் புதைத்துள்ளதாகவும் அப்புதைகுழியை தோண்டி இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X