2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

5 பாரிய நெற் களஞ்சியசாலைகள் அமைக்கப்படவுள்ளன: மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

விவசாயிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாரிய நெற் களஞ்சியசாலைகள் அமைக்கப்படவுள்ளன என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் இவை அமைக்கப்படவுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் எதிர்நோக்கிவந்த சிக்கல் நிலைக்கு இத்திட்டத்தின் விமோசனம் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இப்பகுதிகளின் விவசாயிகளின் அறுவடைசெய்யப்படும் நெல்லை, நெல்  களஞ்சியப்படுத்தும் சபை கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக இந்த களஞ்சியசாலைகள் அமைக்கப்படும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • thavasee Friday, 01 February 2013 07:37 AM

    உங்கட விளைச்சலை பதுக்கதானோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .