2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உணவு விஷமானதில் 5 பேர் பாதிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 5 பேர் உணவு விஷமானதினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அனுமதித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். இப்றாலெவ்வை தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (12) கடையொன்றில் கோதுமை மா வாங்கி தோசை சுட்டுச் சாப்பிட்டதன் பின்பு காலையில் வாந்தியும் மாலையில் மயக்கமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் எஸ். வினோத் (30) மனைவி அ. சிவலெட்சுமி (23) மகள் விநோதினி ( 04) ஆகியோர் ஆரம்ப சிகிட்சைப் பிரிவிலும் கா. கண்ணன் மற்றும் நா. தெய்வானை (55) ஆகியோர் அவசர சிகிட்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  ஆயித்தியமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X