2026 மே 05, செவ்வாய்க்கிழமை

நான்கு இலட்சத்து 50ஆயிரம் பனம் விதைகள் நடப்பட்டுள்ளன

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் இலங்கை பனை அபிவிருத்தி சபையினால் கடந்த இருவருடங்களில் நான்கு இலட்சத்து 50ஆயிரம் பனம் விதைகள் நடப்பட்டுள்ளன.

பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, வாகரை, செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இவ்விதைகள் நடப்பட்டுள்ளன.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இவ்விதைகள் நடப்பட்டதாக பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.விஜயன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வருடம் முதன்முறையாக இம்மாவட்டத்தில் 6620 பனங்கன்றுகள் குறித்த பிரதேசங்களில் நடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் இவ் ஆண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பனங் கன்றுகள் நடப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .