2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக விடுதியிலிருந்து 500 மாணவர்கள் வெளியேறினர்

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக் கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீமானித்ததை அடுத்தே இம் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து முதலாம் வருட தமிழ் மாணவர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

வெளி மாகாணங்களிலிருந்தும் மாவட்டங்களிலுமிருந்தும் வந்து கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து கற்கைகளில் ஈடுபட்டு வந்த மாணவர்களே இவ்விதம் வெளியேறியுள்ளனர்.

நேற்று மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மலையகம், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் பஸ்கள் மாணவர்களால் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

சிரேஷ்ட பெரும்பான்மை சமூக மாணவர்களால் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டத்தின் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்தையில் உரிய பதில் எட்டப்பட்டாமையினாலேயே தமிழ் மொழி மூல மாணவர்கள்  வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததோடு பல்கலைக் கழக விடுதியிலிருந்து முதலாமாண்டு மாணவர்கள் வெளியேறவும் நேரிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X