2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போரதீவுப்பற்றில் 50.5 % மக்கள் மண்ணெண்ணெய் விளக்கு பாவனை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச  செயலகப் பிரிவில் 50.5  சதவீதமான  மக்கள்  மின்சாரமின்மையால்  மண்ணெண்ணெய்  விளக்குகளை  பயன்படுத்துவதாக அப்பிரதேச  செயலாளர்  என்.வில்வரெத்தினம்  தெரிவித்தார்.

இந்த நிலையில், இங்கு 49.2  சதவீதமான  மக்களே    மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 17  குடும்பங்கள்  சூரியசக்தி   மின்சாரத்தையும் 10  குடும்பங்கள்  உயிரியல்  வாயுவையும் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

மீள்குடியேற்றத்தின் பின்னர்  போரதீவுப்பற்று   பிரதேச  செயலகப் பிரிவிலுள்ள  கிராமங்களுக்கு  மின்விநியோகிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய  கிராமங்களுக்கும் மின்விநியோகிப்பதற்கு   நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் கூறினார். 

இது இவ்வாறிருக்க, இப்பிரதேச  செயலகப் பிரிவில்  747  குடும்பங்கள்  வீடுகளின்றி   உள்ளனர். 2,219  பேர்  தற்காலிக  வீடுகளில்;  வசித்து  வருவதாகவும்  அவர்  கூறினார்.

மேலும், இங்கு 6,000  குடும்பங்கள்  குடிநீர்  வசதியின்றியும் 5,602  குடும்பங்கள்   மலசலகூட   வசதியின்றியும் கஷ்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

இங்குள்ளவர்கள் குடிநீரை  பெற்றுக்கொள்வதற்காக   நீண்டதூரம்  செல்ல வேண்டியுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இக்குறைபாடுகள் படிப்படியாக   நிவர்த்தி  செய்யப்பட்டு  வருவதாகவும்    அவர்  கூறினார்.



  Comments - 0

  • jamuna Thursday, 24 July 2014 08:54 AM

    பிரதி அமைச்சர் கருணா அம்மான் சொல்கின்றாரே போரதீவுப் பற்று எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக. அப்படி என்றால் பிரதி அமைச்சர் கூறுவதில் தவறா? அல்லது பிரதேச செயலாளர் கூறுவதில் தவறா? இத்தகவல் முற்றிலும் சரியானதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X