2025 மே 01, வியாழக்கிழமை

மயிலவட்டுவானில் 57 குடும்பங்கள் இடம்பெயர்வு

Kanagaraj   / 2014 ஜனவரி 16 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலவட்டுவான் ஆற்று வெள்ளம் அதிகரித்து வருகின்ற நிலையில் அக்கிராம மக்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை பாதுகாப்பாக வெளியேறி காயான்குடா கண்ணகி வித்தியாலயத்திற்கு இடம்பெயந்துள்ளனர்.

பதுளை உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கும்புக்கண்ஓயா குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததையடுத்து அதன் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் முந்தானை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

இதன் காரணமாக மாவட்டத்தின் ஏறாவூர் பற்று, கிரான், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பிரதேச செயலாளரது அறிவுறுத்தலுக்கமைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைவாக மயிலவட்டுவான ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் முன்னாயத்தாக இக்கிராமத்தினைச் nசுர்ந்த 57 குடும்பங்கள் இன்று மாலை 4 மணிக்கு பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், கிராம சேவையாளர் உதவிகளுடன் இடம் பெயர்ந்துள்ளனர்.

இன்றை யதினம் இவர்கள் பாதுகாப்பாக வெளியேறாவிட்டால், நாளை அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை தோன்றும் என்றமையினாலேயே இவர்கள் இன்றைய தினம் வெளியேறியுள்ளனர்.

கடந்த வருடம் இவர்கள் வெளியேறத் தாமதித்தமையினால் கிராமம் முழுமையான நீரில் மூழ்கியதுடன், மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு படகுகள் மூலமே மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள், சிறுவர்களுக்கான பால்மா வகைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேட்டறிந்ததுடன் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்களுடன் கலந்துரையாடினார். 

அத்தோடு 2007ஆம்ஆண்டு முதல் இன்று வரை 7 தடவைக்கு மேல் இடம் பெயரர்ந்துள்ளதாகவும், தங்களது வீடுகள், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை கால்நடைகள், சேகரித்து வைத்த தானிய வகைகள், சமையல் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் இனிமேல் இடம் பெயர முடியாது எனவும் கிராமத்திற்கு உயரமான கட்டடங்களை அமைத்துத்தருமாறும் கோரிக்கையினை தன்னிடம் முன்வைத்துள்ளனர் என்றும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
 
அதேநேரம், உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படாத வகையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் நடவடிக்கை எடுத்தமையானது முன்னுதாரணமானது என்றும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக ஏறாவூர் பற்று, கிரான், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்படக: கூடிய பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானத்துடனும் வெளியேறுவதற்கான முன்னாயத்தத்துடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .