2026 மே 06, புதன்கிழமை

ஆஸி செல்ல முயன்ற 61 பேர் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

படகின்மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 61 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு, கதிரவெளி கிழக்குக் கடற்பரப்பில் வைத்து மேற்படி 61 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுஷன் - 2 என்று  பெயரிடப்பட்ட படகிலேயே இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்வர்களில் 60 தமிழர்களும் சிங்களவர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில், 43 ஆண்களும் 8 பெண்களும் 10 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

படகுடன் சேர்த்து நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

  Comments - 0

  • vallarasu Friday, 19 April 2013 11:40 AM

    விடுங்கய்யா அவர்கள் போய் நிம்மதியாக வாழட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .