2026 மே 06, புதன்கிழமை

மீன்பிடிக்கச் சென்ற 7 படகுகள் கரை வந்து சேரவில்லை: காத்தான்குடி மீனவர்கள்

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி கடலிலிருந்து மீன்பிடிப்பதற்குச் சென்ற 7 மீன்பிடிப் படகுகள் இன்னும் கரை வந்து சேரவில்லை என காத்தான்குடி கடற்கரை மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த 7 படகுகளிலும் மீனவர்கள் சென்றுள்ளதுடன், அவர்கள் தொடர்பான எந்தவிதத் தகவலும் இதுவரையில்  கிடைக்கவில்லை எனவும் இந்த மீனவர்கள் கூறினர்.

இந்த 7 மீன்பிடிப் படகுகளில் 2 மீன்பிடிப் படகுகள் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் படகுகள் ஆகும். மற்றைய 5 படகுகளும்; பெரிய மீன்பிடிப் படகுகள் ஆகும். இந்த பெரிய மீன்பிடிப் படகுகள் 3 அல்லது 4  தினங்கள் ஆழ்கடலில் நின்று மீன்பிடிக்கும் படகுகள் எனவும்  மீனவர்கள் தெரிவித்தனர்.

மகேசன் சூறாவளியால் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பினால் அவர்கள் கடலில் நிற்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்பு மற்றும் காற்று குறைந்தவுடன் இவர்கள் கரைக்கு வரலாம் எனவும் எதிர்பார்ப்பதாகவும் காத்தான்குடி கடற்கரை மீனவர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .