2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கி 75வது வருட பூர்த்தி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இலங்கை வங்கியின் 75ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு, செங்கலடி கிளையின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் கடன் மற்றும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) செங்கலடி வங்கிக் கிளையில் நடைபெற்றது.

செங்கலடி கிளை முகாமையாளர் வி. செகராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் சிந்தியா மாட்டின், வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்;போது செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கதிரைகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகிதியன்று நாடு முழுவதும் பலூன் விடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 கிழக்கு மாகாணத்திற்குரிய பிரதான நிகழ்வு மட்டக்களப்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பலூன்களில் தலா 1000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கண்டுபிடிப்பவர்கள் அருகிலுள்ள இலங்கை வங்கி கிளைக்குச் சென்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என செங்கலடி கிளை முகாமையாளர் வி. செகராஜசிங்கம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X