2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சேதமடைந்த முள்ளாமுனை பாலம் 76 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


வெள்ளம் காரணமாக முற்றாக தேமடைந்த மட்டக்களப்பு முள்ளாமுனை பாலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 76 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதாக வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட வதிவிட பொறியியலாளர் கே.பிரேமதாச தெரிவித்தார்.

செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முள்ளாமுனை பாலம் 30 மீற்றர் நீளத்தைக்கொண்டதாகும்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் இப்பாலம் புனரமப்புச்செயயப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புனரமைப்பு செய்யப்பட்டுள்ள முள்ளாமுனை பாலம் எதிர்வரும் செப்டெம்பர் மாத முதற்பகுதியில் மாகாண அமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்பாலம் புனரமைக்கப்பட்டதனூடக இப்பகுதியில் வாழும் அதிகமான மக்கள் நன்மையடைந்துள்ளனர். மழைகாலத்தில் அவர்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுவந்தமை குறிப்பிடத்தககது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X