Kogilavani / 2016 ஜூலை 25 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றபோது, ஸ்தாபன விதிகளுக்கு அமைவாக நேர்முகத் தேர்வு இடம்பெறுவதில்லை என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா, கிழக்கு மாகாண ஆளுநர், மாகாணக் கல்வி அமைச்சர், செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
'மாகாணக் கல்வி அமைச்சிக்குட்பட்ட பல்வேறு தரங்களில் உள்ள பாடசாலைகளில், அதிபர் வெற்றிடம் ஏற்படுகின்றபோது ஸ்தாபன விதிகளுக்கு அமைவாக விண்ணப்பம் கோரப்படுவதுமில்லை, நேர்முகத் தேர்வு இடம்பெறுவதுமில்லை.
பாடசாலையின் தரத்துக்கேற்ப மாகாணத்தில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களுக்கு, ஒரேமாதிரியான விண்ணப்பப் படிவங்கள் பயன்படுத்தப்படல் வேண்டும்.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் அதிபர் வெற்றிடம் உள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் வௌ;வேறு விதமான விண்ணப்பப் படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும், வலயத்தின் அதிகாரிகள் மட்டத்திலும் குறித்த பாடசாலைக்கு யாரைத் தெரிவு செய்யவேண்டுமென்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப விண்ணப்பப் படிவங்களை தயாரித்து அனுப்புவதே இதற்கு காரணம்' என குறிப்பிட்டுள்ளார்.
'இச்செயற்பாடானது பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டத்தைப் பின்னடையச் செய்யவே உதவுகிறது.
மேலும், அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்ற பின்னர், அவர் பெற்ற புள்ளிகள் பரீட்சாத்திக்கு அனுப்பப்பட வேண்டும். அல்லது பொதுவான விளம்பரப் பலகையிலாவது ஒட்டப்படல் வேண்டும். ஆனால், இந்த நடைமுறை கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் பின்பற்றப்படுவதில்லை.
நேர்முகத் தேர்வு நிறைவடைந்து பல நாட்கள் அல்லது பல மாதங்கள் கழிந்த நிலையில் பரீட்சார்த்திகளிடமிருந்து மேலும் பல ஆவணங்களைக் கோரிப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை காணப்படுகிறது.
இச்செயற்பாட்டின் மூலம் நேர்முகத் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதுடன் பரீட்சாத்திகளை அவமானப்படுத்தும் செயற்பாடாகவும் நாம் பார்க்கின்றோம்.
இவற்றை கவனத்திற்கொண்டு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகளை வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நீதி நியாயத்துடனும் நடத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டோருக்கு உள்ளது.
இந்த ஊழல் நிறைந்த வெளிப்படைத் தன்மையற்ற வழிமுறைகள் இனிமேலும் தொடருமானால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமோ, அல்லது மனிதவுரிமை ஆணைக்குழுவிடமோ முறைப்பாடு செய்யவேண்டி நேரிடும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago