Kogilavani / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கென, சுமார்; 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில், 9,000 மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபீஸ் நசீர் அகமட், இந்த 9,000 மில்லியன் ரூபாயை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக செலவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டார்.
'இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகளே காரணம்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கான புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
'அபிவிருத்திக்கென நிதியொதுக்கிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது 40,000 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம், அதற்கு எமது அரச இயந்திரம் எவ்வாறு ஒத்துழைக்கப்போகின்றது என்பதில் எமக்கு கேள்வியுள்ளது' என குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் வளங்களை வெளி மாகாணங்களுக்கு கொண்டுச் செல்கின்ற துரதிஷ்ட்டமான நிலையை எதிர்கொண்டுள்ளோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் மக்களது தலைகளில் அடிக்கின்ற அதிகாரிகளாக இருக்கக் கூடாது' என அவர் மேலும் கூறினார்.
'மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் ஒதுக்குப்புறமான இடத்தில் ஏன் அமைக்கப்படுகின்றது? என பலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இச்செயலகம் அமைக்கப்படுமிடத்தில்தான் தொழில்பேட்டை வலயம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை பாரிய அபிவிருத்தி வலயமாக மாற்றவுள்ளோம். இதை நிறைவேற்ற அனைவரின் பங்களிப்பும் அவசியமாகும்' என அவர் கோரினார்.
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago