2025 மே 08, வியாழக்கிழமை

அமைச்சர் துரைராஜசிங்கம் வாகரைக்கு விஜயம்

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட கிராம மக்களின் குறைபாடுகள் தொடர்பாக ஆராயும் முகமாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் நேற்று (28) மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, கட்டுமுறிவு. ஆண்டான்குளம், சோதயன்குளம், பாற்சேனை, புளியன்கண்டலடி, ஊரியன்கட்டு ஆகிய கிராமங்களுக்குச் சென்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

கடந்த கால யுத்த சூழல்நிலையின்போது, இடம்பெயர்வுகளை எதிர்நோக்கிய இப்பிரதேசங்களில் அமைந்துள்ள குளங்கள், ஆலயங்கள் சிறுவர் இல்லங்கள் மற்றும் புனரமைக்கப்படாத வீதிகள் ஆகியவற்றை அமைச்சர் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் மக்களின் அபிப்பிராயங்கள் பற்றியும் பிரதேசவாசிகள் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினர்.

இதற்கமைவாக தன்னால் இயன்றவரையில் மக்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வேன் என அமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X